Empowering the younger Generation

Empowering the younger Generation


Monday, March 25, 2019

OpenStreetMap என்றால் என்ன?

OpenStreetMap என்றால் என்ன?

அனைவருக்கும் வணக்கம்.......! 
நாம் இன்று OpenStreetMap என்றால் என்ன? என்பது பற்றி பாக்க போகின்றோம்.

முதலில் Map என்றவுடனே நம்கண்முன்னே வருவதெல்லாம் Google Mapதான் ஏன்என்றால்  Android O/S இல்   Google Map வருவதனால் நாம் அனைவரும் அதற்க்கு பரிட்சையமாகிவிட்டோம்.
சரி நாம் முதலில் சில Maps வகைகளை பார்ப்போம் 
1. Google Map
2. Apple Map
3. Wiki Map
4. Bing Map
5. OSM map - OpenSreetMap 

 பிற Maps களில் என்ன பிரச்சனை உள்ளது  என்பதை பற்றி பார்ப்போம் 
1.API Restrictions
2.Licensing & Rights based Restrictions
3.Intentional errors / lies
4.Vendor Lock-In
5.Hierarchies / Access Levels
6.Limited Tags/ Features

அடுத்ததாக இங்கு நாம் ஏன் OSM ஐ தெரிவுசெய்தோம் என்பதை பற்றி பார்ப்போம் 
1.Open Data,No limitation on data usage
2.No Lock-In
3.No Easter Eggs
4.No Hierarchies
5.Tags / Features -Community Proposals

  • OpenStreetMap என்றால் என்ன?

OpenStreetMap  என்பது உலகின் ஒரு சிறந்த திறந்த மூல வரைபடம் ஆகும். இது உலகம் முழுவதும் உள்ளவர்கள் (தன்னார்வலர்களால்) உருவாக்கிய வரைபடம். எல்லோராலும் சுவாரஸ்யமான அல்லது முக்கியமான விஷயங்களைக் கண்டறிய முடியும். அது ஏதோவொன்றாக இருக்கலாம் - காடுகளிலிருந்து சாலைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் வழியாக கடைகள் வரை. மக்கள் வரைபட கட்டிடங்கள், நடைபாதை வழிகள், சுற்றுலா இடங்கள், பாறைகள் மற்றும் நீரோட்டங்கள் என்பன...

இனி நாம் எவ்வாறு OSM க்கு பங்களிக்க முடியும் என்பதை பார்ப்போம்
1.create Account- (https://www.openstreetmap.org)என்ற இணையதள முகவரிக்கு செல்க 2.Arm-chair Mapping -இருந்த இடத்தில் இருந்து வரைவது 3.Field Survey -தளத்துக்கு சென்று வரைவது 4.Hibrid -மேலே சொன்ன இரண்டும் இதிலடங்கும்

இந்த பிரிவில் OpenStreetMap வலைத்தளத்தை எவ்வாறு வழிநடத்தலாம் மற்றும் பயனர் கணக்கிற்காக பதிவு செய்யவது எப்படி என்பதை படிப்படியாக கற்ப்போம், உங்களுடைய சொந்த பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பெற்ற பிறகு, வரைபடத்தில் உங்கள் முதல் புள்ளிகளைப் பங்களிக்க முடியும்.
https://www.openstreetmap.org/#map=19/7.37164/81.79639&layers=N

  • ரைபடத்தை எப்படி தொடங்குவது?

  1.   ஒரு OPENSTREETMAP கணக்கை உருவாக்கவும்

  • உங்கள் இணைய உலாவியைத்(web browser) திறந்து  சாளரத்தின்மேல் உள்ள முகவரிப் பட்டியில்(address bar), www.openstreetmap.org  உள்ளிட்டு, Enter ஐ அழுத்தவும்
  • OpenStreetMap வலைத்தளத்தில், பக்கத்தின் மேல் வலது மூலையில் "பதிவு பெறுக " (Sign up) என்பதைக் கிளிக் செய்க.
  • இதைப் போன்ற ஒரு புதிய பக்கத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள்

  • முதல் இரண்டு பெட்டிகளில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் இரு பெட்டிகளிலும் அதே மன்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். பின்னர், OpenStreetMap உடன் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த உங்கள் மின்னஞ்சலை திறக்க வேண்டும்.
  • மூன்றாவது பெட்டியில், நீங்கள் விரும்பும் பயனர் பெயரை உள்ளிடவும்.
  • நான்காவது மற்றும் ஐந்தாவது பெட்டிகளில் ஒரு புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும். இரண்டு பெட்டிகளிலும் அதே கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்
  • நீங்கள் அனைத்து பெட்டிகளையும் நிறைவு செய்த பிறகு, பக்கத்தின் கீழே உள்ள "பதிவு" என்பதைக் கிளிக் செய்க.


  • OpenStreetMap பக்கத்தில், மேல் வலது மூலையில் "உள்நுழை" என்பதைக் கிளிக் செய்க.
  • உங்கள் OpenStreetMap பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter ஐ அழுத்தவும்.
  • நீங்கள் இப்போது உள்நுழைந்திருக்க வேண்டும் பக்கத்தின் மேல் வலது மூலையில் உங்கள் பயனர்பெயரை நீங்கள் காண முடியும்.


OSM எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம். OSM தரவு மாதிரியில் மூன்று அடிப்படை கூறுகள் உள்ளன இவை nodes , ways மற்றும் relations ஆகியவை அனைத்தும் ஒரு ஐடி மூலம் வந்தவை வந்தவையாகும்   
http://overpass-turbo.eu/


 நீங்கள் இதை இதுவரை செய்திருந்தால், வாழ்த்துக்கள்!  OpenStreetMap உடன் வரைபடங்களை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய நல்ல புரிதலை பெற்றிருப்பீர்கள்.


OpenStreetMap, மற்றும் OSM பற்றி மேலும் அறிய உதவும் ஆவணங்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான பிற திட்டங்களைப் பற்றி இங்கே காணலாம்.

http://www.kaniyam.com/video-on-openstreetmaps-org-in-tamil/
https://mapsaregreat.com/What-is-OpenStreetMap.html
https://wiki.openstreetmap.org/wiki/Using_OpenStreetMap


அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்….
             நன்றி
         வணக்கம்